Wednesday, October 22, 2008

பக்தி பாடல்


பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

உலகெலாம் உணர்ந்து ஓதற்க்கு அரியவன்... '
நீர்மலி வேணியன் அழகில் சோதியன்
அம்பலத்து இடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

திருமந்திரம் - திருமூலர்

ஐந்து கரத்தினை ஆனை முகத்தினை
இந்து இளம்பிறை போலும் எயிற்றினை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை
புத்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

திருக்கடைக்காப்பு - திருஞான சம்பந்தர்

பிடியதனுருவுமை கௌமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடுமவரிடர்
கடி கணபதிவர அருளினன் முகுகொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே.

kuRai onRum illai



குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா
குறையொன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா! மலையப்பா! கோவிந்தா! கோவிந்தா!

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும்
குறையொன்றும் எனக்கில்லை கண்ணா!

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா! மலையப்பா! கோவிந்தா! கோவிந்தா!

கலிநாளுக்கு இரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

யாரும் மறுக்காத மலையப்பா உன்வாழ்வில்
ஏதும் தரநிற்கும் கருணைக்கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கே

ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா! மலையப்பா! கோவிந்தா! கோவிந்தா


Sunday, September 14, 2008

eKalappai 2.0b(Bamini)

  • தரையிறக்கம் செய்ய இம் முகவரியை பாவிக்கவும்thamizla.com
  • இந்த எழுதியை பதிவிறக்கவும்! download file name : eKalappai 2.0b(Bamini) eKalappai 2.0b(Bamini)
  • பின்னர் கணணியில் ஏற்றம் செய்யவும் install
  • வலது பக்க கீழ்மூலையில் K என்னும் அடையாளத்தில் மவுசைக் கிளிக் செய்து சுரதா பாமுனியை தெரிவுசெய்யவும்
  • பின்னர் பாமுனி தட்டச்சின் மூலம் நீங்கள் எமழுதிக் கொள்ளலாம் .
  • இதன் மூலம் நீங்கள் தேடவிரும்புவதை தமிழில் தேட இது ஒரு நல்ல வரப்பிரசாதம்
  • நன்றி ச.சுரதா அவர்கட்கு

Thursday, September 11, 2008

vaan nila nila

வாசமில்லா மலரிது

வாசமில்லா மலரிது ஹஹஹஹஹ
வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்று
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

மாதங்களில் என்ன பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது


எங்கேயோ பார்த்த மயக்கம்

எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது


இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்...
அறிவை மயக்கும் மாய தாகம்


இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ... ஏதானதோ...
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க

எங்கேயோ பார்த்த...

ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து...



சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொல்லோ
பட்டுக் கருனீலப் புடவை பதித்த நல் வயிரம்
நட்டனடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி

சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்
நீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளடி
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடி
வாலைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் சாத்திரம் ஏதுக்கடி
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணமா சாத்திரம் உண்டோடி
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தம் ஒன்று

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து

அம்மன் கோயில் கிழக்காலே

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே என் சின்னா ராச (2)
உன் தோளுக்காகத்தான் இந்த மால ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்

(பூவ)

காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால (2)
குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என தப்பாம அண என் தேகம் ஏடாச்சு
சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன் (2)
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்

(பூவ)

வாடையா வீசும் காத்து வலைக்குதே எனப்பாத்து
வாங்கலேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து
கண்ணாடி வள முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா (2)
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்

பொன்னை விரும்பும் பூமியிலே

ஆலயமணி

பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலயும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே

(பொன்னை)

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே ஆலயமணியின் இன்னிசை நீயே (2)
தாய்மை எனக்கே தந்தவர் நீயே தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம் புதிய தீபம் கொண்டு வந்தாயே

(பொன்னை)

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன் பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன் (2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன் அழைத்து வந்தார் உன்னிடம் என்னை
இந்த மனமும் இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே

(பொன்னை)

ஆல மரத்தின் விழுதினைப் போலே அனைத்து நீயும் உறவு தந்தாயே (2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில் வாழ்வது போலே வாழ வைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு உள்ளம் ஒன்றே என்னுயிரே

(பொன்னை)

நான் காற்று வாங்கப் போனேன்

கலங்கரை விளக்கம்

நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

(நான் காற்று)

நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும் (2)
அந்த அழகு ஒன்று போழும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

(நான் காற்று)

நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை (2)
கொஞ்சம் விலகி நின்ற போதும் என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

(நான் காற்று)

என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை (2)
என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

(நான் காற்று)

என்னவளே அடி என்னவளே

காதலன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் - இன்று
கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்

(என்னவளே)

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டயும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி - இது
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி

(என்னவளே)

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் - என்
காதலின் தேவயை காதுக்குள் ஓதிவைப்பேன் - உன்
காலடி எழுதிய கோலங்கள் புதுக்
கவிதைகள் என்றுரைப்பேன்

(என்னவளே)

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்

காலமெல்லாம் காதல் வாழ்க


ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
telephon ண் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்தப் பாடலின் சுவரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ

(ஒரு மணி)

வாசம் மட்டும் வீசும் பூவே வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போல எங்கும் உன்னைத் தேடுகிறேன் நான் தேடுகிறேன்
தேடி உன்னைப் பார்த்துப் பார்த்து கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில் நானே மூழ்குகிறேன் நான் மூழ்குகிறேன்
வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றைச் சிறகானேன்
காதலின் சுடும் தீயிலே நான் எரியும் விறகானேன்
மேடைதோரும் பாடல் தந்த வான்மதியே
ஜீவன் போகும் இங்கு வந்தால் நிம்மதியே
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

(ஒரு மணி)

உந்தன் முகம் பார்த்த பின்னே கண்ணிழந்து போவதென்றால்
கண்கள் ரெண்டும் நானிழப்பேன் இப்போதே நான் இப்போதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதே மூடாதே இமை மூடாதே
காதலே என் காதலே எனைக் காணிக்கை தந்துவிட்டேன்
சோதனை இனித் தேவையா சுடும் மூச்சினில் வெந்து விட்டேன்
காதல் என்னும் சாபம் தந்த தேவதையே
காணலாமோ ராகம் நின்று போவதையே
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

(ஒரு மணி)
oru mani adiththal kalamellam vallha-->

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு

கிழக்கு வாசல்

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்

(பச்ச மல)

காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம்
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய்

(பச்ச மல)

மூனாக்கு மொகம் பார்த்து வெண்ணிலா நாண
தாளாம தடம்பார்த்து வந்தவழி போக
சித்திரத்துச் சோல முத்துமணி மால
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணில மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய்

(பச்ச மல)

பாடிப் பறந்த கிளி

கிழக்கு வாசல்


பாடிப் பறந்த கிளி
பாத மரந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே
கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே

(பாடிப் பறந்த)

சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சிப் போனதடி
கணட கனவு அது காணாதாச்சு
கண்ணுமுழிச்சா அது வாராது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு

(பாடிப் பறந்த)

ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கல்லிலடிச்சா அது காயம் ஆறும்
சொல்லிலடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
வீணாச தந்தவரு யாரு யாரு

(பாடிப் பறந்த)

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

அடுத்த வாரிசு

பாடல்: ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
குரல்: மலேஷியா வாசுதேவன்
வரிகள்: கங்கை அமரன்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை தீரும் வரை வா
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம் (2)

(ஆசை)

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
இங்கு சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

(ஆசை)

முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
இங்கு பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

(ஆசை)

aasai nooru vakai vahai adutha varisu-->

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

அடிமைப் பெண்

பாடல்: ஆயிரம் நிலவே வா
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சுசீலா

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று பாடப் பாட

(ஆயிரம்)

நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ (2)
உன் உயிரிலே என்னை எழுத பொன்மேனி தாராயோ

(ஆயிரம்)

மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ (2)
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

(ஆயிரம்)

அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெற
அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெற
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ (2)
இன்பம் இதுவோ இன்னும் எதுவோ தந்தாலும் ஆகாதோ

(ஆயிரம்)

பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
அந்த நிலையில் அந்த சுகத்தை நான் உணரக் காட்டாயோ

(ஆயிரம்)
aajiram nilave vaa va v aimajp pen-->

உள்ளம் என்றொரு கோவிலிலே

அன்பே வா

பாடல்: உள்ளம் என்றொரு கோவிலிலே
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

அன்பே வா அன்பே வா வா வா வா

உள்ளம் என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா

அன்பே வா அன்பே வா வா வா வா

நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்
நிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்
பாதையிலே வெளிச்சமில்லை பகல் இரவு புரியவில்லை
பார்வையும் தெரியவில்லை
ஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை

(உள்ளம் என்றொரு)

வான்பறவை தன் சிறகினை எனக்குத்தந்தால்
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்துவந்தே
காதலை வாழவைப்பேன்
அழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்

(உள்ளம் என்றொரு)

புதிய வானம் புதிய பூமி

அன்பே வா

பாடல்: புதிய வானம் புதிய பூமி
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

புதிய வானம் புதிய பூமி - எங்கும்
பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது ஒ ஒ ஓஹோ

லால்ல லாலால்லா ஓஓஓ லால்ல லாலால்லா

(புதிய வானம்)

புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே
இமயத்தில் எழுகின்ற குளிர்காற்று - என்
இதயத்தைத் தொடுகிறது
அன்று இமயத்திலே சேரன் கொடி பறந்த
அந்தக் காலம் தெரிகிறது
அந்தக் காலம் தெரிகிறது

(புதிய வானம்)

சின்னக் குழந்தைகளைப் பார்க்கையிலே
பிஞ்சு மழலை மொழி கேட்கையிலே
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் - என்ற
நம்பிக்கை தெரிகிறது
அவர் வரவேண்டும் நலம் பெறவேண்டும்
என்று ஆசை துடிக்கிறது
என்று ஆசை துடிக்கிறது

(புதிய வானம்)

எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழிதேடி - இங்கு
இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்ததுபோல் மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்
இவர் வாழ்வில் விளக்குகிறார்

(புதிய வானம்)

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்

அன்பே வா

பாடல்: நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
குரல்: டி எம் சௌந்தரராஜன், சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்

எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்

(நான் பார்த்ததிலே)

இடையோ இல்லை இருந்தால் - முல்லைக்
கொடிபோல் மெல்ல வளையும்
சின்னக் குடைபோல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே
குளிர் புன்னகை புரிவதனாலே
கனவோ நினைவோ எதுவோ

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான்
நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்

ஒரு நாள் இல்லை ஒரு நாள்
வந்து அவந்தான் சொல்லத்துடித்தான்
உயிர் நீயே என்று நினைத்தான்
இன்று கண்ணால் சொல்லி முடித்தான்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ
இந்தக் காதலி சுகம் பெறுவாலோ
கனவோ நினைவோ எதுவோ

(நான் பார்த்ததிலே)

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

அவள் ஒரு தொடர்கதை


எம் எஸ் விஸ்வனாதன்
பாடல்: தெய்வம் தந்த வீடு
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தானா? இல்லை
என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

(தெய்வம்)

வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம்?
உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன?
இதில் தாய் என்ன? மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

(தெய்வம்)

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன?
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

(தெய்வம்)

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே

அழகன்

பாடல்: சாதி மல்லிப் பூச்சரமே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்:

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையுள்ள ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

(சாதி மல்லிப்)

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்லா ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

(சாதி மல்லிப்)

உலகமெல்லாம் உண்ணுப்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா
படிச்சத புரிஞ்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

(சாதி மல்லிப்)

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ

ஆயிரத்தில் ஒருவன்

பாடல்: ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

(ஓடும்)

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

(ஓடும்)

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

(ஓடும்)

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்

ஆயிரத்தில் ஒருவன்

விஸ்வனாதன்-ராமமூர்த்தி
பாடல்: அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
குரல்: டி எம் சௌந்தரராஜன் குழுவினர்
வரிகள்: கண்ணதாசன்

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(லலாலா லா...)

(அதோ அந்த)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல்னீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ அந்த)

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ அந்த)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ அந்த)

சட்டி சுட்டதடா கை விட்டதடா

ஆலயமணி

பாடல்: சட்டி சுட்டதடா கை விட்டதடா
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

சட்டி சுட்டதடா கை விட்டதடா (2)
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா (2)
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா

(சட்டி)

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா (2)
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா

(சட்டி)

ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா (2) - மனம்
சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா

(சட்டி)

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா (2)
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

(சட்டி)

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா

ஆலயமணி

பாடல்: கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
குரல்: டி எம் சௌந்தரராஜன், பி சுஷீலா
வரிகள்: கண்ணதாசன்

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா (2)
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா (2)

(கல்லெல்லாம்)

கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் காலைக்கனியாக்குமுந்தன் ஒரு வாசகம் (2)
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக் கண்ணல்லவா (2)
இல்லயென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா

(கல்லெல்லாம்)

கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா (2)
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி (2)
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி

(கல்லெல்லாம்)

பச்சைக் கிளிகள் தோளோடு

இந்தியன்

பாடல்: பச்சைக் கிளிகள் தோளோடு
குரல்: ஜேசுதாஸ்
வரிகள்: வைரமுத்து

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம் பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

(பச்சைக் கிளிகள்)

அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம்
அடி பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் - அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

(பச்சைக் கிளிகள்)

உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

(பச்சைக் கிளிகள்)

ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே

இளமைக் காலங்கள்

பாடல்: ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: வைரமுத்து

ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே
கண்ணீல் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

(ஈரமான)

என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம் (2)
உன் வாசலில் எனைக் கோலம் இடு இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து

(ஈரமான)

நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை (2)
என் நெஞ்சிலே ஒரு துக்கம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி...
உன் போல என்னாசை தாங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

வச்ச பார்வை தீராதடி மச்சான் குறி மாறாதடி

இளமைக் கோலம்

பாடல்: வச்ச பார்வை தீராதடி
குரல்: ஜேசுதாஸ்
வரிகள்:

வச்ச பார்வை தீராதடி மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்

(வச்ச)

எங்கு போனாலும் உன்னைத்தேடி ஆசை பின்னால போகும்
எங்கு பார்த்தாலும் உன்னைப் போல தோற்றம் முன்னால தோணும்
என் கையோரம் நீ வந்தாலே என் சந்தோஷம் மேலே போகும்
காணாததைக் கண் தேடுது கன்னி நீ என்னோடு வாம்மா

(வச்ச)

கன்னிப் பூவோட நல்ல வாசம் காளை நெஞ்சத்தை மாத்தும்
சின்னக் காலோட வந்த தாளம் தேக சொர்க்கத்தில் ஏறும்
உன் கண்ணாலே நீ பார்த்தாலே நான் ஏதேதோ மாறிப் போவேன்
ஆறாதது மாறாதது ஆஹாஹா பெண்ணோட மோகம்

(வச்ச)

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே

பாடல்: அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம்
குரல்: மனோ
வரிகள்:

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் பூவனம் இதோ காமன் உற்சவம் இங்கே
ஒரே நாள் நிலவினில் முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா

(அதோ)

உனது பாதம் அடடட இலவம் பஞ்சு
உதட்டைப் பார்த்து துடித்தது எனது நெஞ்சு
இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்
தேகம் கொஞ்சம் மூடவே கூந்தல் போதும் போதுமே
ஆடை இங்கு வேண்டுமா நாணம் என்ன வா வா

(அதோ)

குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்
தென்னம்பாண்டி முத்தைப் போல் தேவி புன்னகை
வண்டு ஆடச் சொல்லுமே செண்டு மல்லிகை
உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான் இன்னும் என்ன சொல்ல

(அதோ)

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே

உதய கீதம்

பாடல்: தேனே தென்பாண்டி மீனே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
வரிகள்:

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ

(தேனே)

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலம்
ராஜா நீதன் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

(தேனெ)

பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மனதைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தல் வாசம் கெட்டு போகுமா
ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை


ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

பாடல்: ஏதோ ஒரு பாட்டு (ஆண்)
குரல்: ஹரிஹரன்
வரிகள்:

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

(ஏதோ)

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

(ஏதோ)

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்

(ஏதோ)

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே

எங்க வீட்டுப் பிள்ளை

பாடல்: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குரல்: டி எம் சௌந்தரராஜன், பி சுஷீலா
வரிகள்: கண்ணதாசன்

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்
குமரிப்பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தரவேண்டும்
காதல் நெஞ்சைத் தந்துவிட்டு குடியிருக்க நீ வரவேண்டும்

(குமரிப்)

தென்றல் தங்கையாம் திங்கள் தோழியாம் கன்னி ஊர்வலம் வருவாள்
அவள் உன்னைக் கண்டு உயிர் காதல் கொண்டு தன் உல்ளம் தன்னையே தருவாள்
நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிகொள்ள சுகம் மெல்ல மெல்லவே புரியும் (2)
கை தொடுவாய் தொடாமல் தூக்கம் வருமோ துணையைத் தேடி நீ வரலாம் (2)

(குமரிப்)

பூவை என்பதோர் பூவை என்னதோர் தேவை தேவை என வருவேன்
இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்க அதை உன்னைக் கேட்டு நான் தருவேன்
கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன ஒரு நாளும் அழகு குறையாது (2)
அந்த அழகே வராமல் ஆசை வருமோ அமுதும் தேனும் நீ பெறலாம் (2)

(குமரிப்)



Tuesday, September 02, 2008

Tamilsongs list

2007 September (1)
எங்கே அவள் என்றே மனம் தேடுதே

2007 August (41)

உச்சி வகிந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
புதிய வானம் புதிய பூமி
தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமரபரணித்
காலங்களில் அவள் வசந்தம்
போனால் போகட்டும் போடா - இந்த
பாலும் பழமும்
உள்ளம் என்பது ஆமை
இளைய நிலா பொழிகறதே
கண் போன போக்கிலே
உயிரும் நீயே உடலும் நீயே
வைகறையில் வைகைக்கரையில்
தோகை இளமயில் ஆடி வருகுது
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்
வான் நிலா நிலா அல்ல உன்
இளமையெனும் பூங்காற்று
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
ஒருவன் ஒருவன் முதலாளி
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்
தங்கத் தாமரை மகளே
அச்சம் என்பது மடமையடா
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
பாடும்போது நான் தென்றல்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
இந்தப் பச்சைக் கிளிக்கொரு
எங்கிருந்தாலும் வாழ்க
இது ஒரு பொன்மாலைப் பொழுது
பூங்கதவே தாள்திறவாய்
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும்
பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
உன்னிடம் மயங்குகிறேன்
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
தூளியிலே ஆடவந்த
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
மௌளனமே பார்வையாய்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
மயக்கமா கலக்கமா
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
இயற்கை என்னும் இளைய கன்னி

2005 June (9)

பாடிப் பறந்த கிளி
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
ஒரு மணி அடித்தால் கண்ணே
என்னவளே அடி என்னவளே
நான் காற்று வாங்கப் போனேன்
பொன்னை விரும்பும் பூமியிலே
சின்ன மனிக் குயிலே மெல்ல வரும்
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து
சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா

2005 February (19)

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
ஏதோ ஒரு பாட்டு என்
தேனே தென்பாண்டி மீனே இசை
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம்
வச்ச பார்வை தீராதடி மச்சான்
ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம்
சட்டி சுட்டதடா கை
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம்
அதோ அந்த பறவை போல
ஓடும் மேகங்களே ஒருசொல்
சாதி மல்லிப் பூச்சரமே
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
நான் பார்த்ததிலே அவள்

புதிய வானம் புதிய பூமி
உள்ளம் என்றொரு கோவிலிலே

ஆயிரம் நிலவே வா ஓராயிரம்
ஆசை நூறு வகை வாழ்வில்